Latestமலேசியா

ஜோகூரில் அனைத்து இடுகாடுகளையும் ஊராட்சி மன்றங்கள் நிர்வகிக்க வேண்டும்; Bekok சட்டமன்ற உறுப்பினர்

கோலாலம்பூர், நவ 25 – ஜொகூரில் உள்ள இடுகாடுகள் அனைத்தும், ஊராட்சி மன்ற தரப்பின் நிர்வகிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார், Bekok சட்டமன்ற உறுப்பினர் எஸ் . ராமகிருஷ்ணன்.

தற்போதைக்கு அம்மாநிலத்தில் உள்ள லாபிஸ் ( labis ), செகாமாட் ( segamat) பகுதிகளில் உள்ள இரு இடுகாடுகளை மட்டுமே, தத்தம் ஊராட்சி மன்றங்கள் நிர்வகிக்க, அம்மாநில மெந்திரி புசார் உத்தரவிட்டிருக்கின்றார்.

மற்ற இடுகாடுகள், அரசு சாரா நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன என்பதை எஸ் . ராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார். அத்தரப்பினர் நிர்வகிக்கும் இடுகாடுகளில் மக்கள் உடல்களை தகனம் செய்ய அதிகம் செலவிட வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

அதையே, ஊராட்சி மன்றங்கள் இடுகாடுகளை நிர்வகிக்கும் போது கட்டணம் அதிகம் குறைவதோடு, வசதி குறைந்த மக்களின் சுமையைக் குறைக்க முடியுமென்றாரவர்.

அதே வேளை, லாபிஸ், செகாமாட் இடுகாடுகள் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதாகவும், அப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் Tangkak, kluang போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டிருப்பதாகவும் ராமகிருஷ்ணன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!