Latest

ஜோகூரில் அரசு ஊழியர்களுக்கு நான்கரை நாள் வேலை அடுத்த மாதம் விவாதிக்கப்படலாம்- பாமி பாட்ஷில்

புத்ரா ஜெயா, நவ 22 – ஜோகூரில் அரசுத்துறையில் வேலை நேரத்தை நான்கரை நாட்களாக மாற்றும் ஜோகூர் அரசாங்கத்தின் ஆலோசனை குறித்து அடுத்த மாதம் மலேசிய – சிங்கப்பூர் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். எனினும் இந்த விவகாரம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லையென ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளரான பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் மலேசிய – சிங்கப்பூர் தலைவர்களின் கூட்டத்தில் இந்த விவகாரம் கவனிக்கப்படலாம் என இன்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது பாமி கூறினார். மாநிலத்தில் அரசுத் துறையில் நான்கரை நாட்களுக்கு வேலை நேரத்தை மாற்றும் ஆலோசனை குறித்து ஜோகூர் இப்போது ஆராய்ந்து வருவதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து வார இறுதி விடுமுறை மீண்டும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படவிருப்பதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என மந்திரிபெசார் டத்தோ ஒன் ஹபிஸ காசி ( Datuk onn Hafiz Ghazi ) தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!