Latestமலேசியா

ஜோகூரில் ஆற்று தூய்மைக்கேடு; சிங்கப்பூரியர் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றச்சாட்டு

கோத்தா திங்கி, செப்டம்பர்-26, ஜோகூரில் நீர் தூய்மைக் கேட்டை ஏற்படுத்தியதன் பேரில் ஒரு சிங்கப்பூரியர் உள்ளிட்ட ஐவர் இன்று கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

செப்டம்பர் 4-ஆம் தேதி பண்டார் தெங்காராவில் நீர் சேவைக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டோரில், தொழிற்சாலை இயக்குநரான 41 வயது சிங்கப்பூர் ஆடவர் Tan Eng Yon-னும், உள்ளூர் ஆடவரான 53 வயது Law Kam Wai-யும் அடங்குவர்.

ஏனைய மூவர், லாரி ஓட்டுநர்கள் மற்றும் துணை ஓட்டுநர்களான 23 வயது ஆர்.நவராஜ், 28 வயது கே.பிரசாந்த், 52 வயது கே.ஜெயகுமார் ஆகியோர் ஆவர்.

இன்னமும் பிடிபடாமலிருக்கும் மற்றொரு நபரோடு கூட்டு சேர்ந்து அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், குற்றம் சாட்டப்பட்ட ஐவரும் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30-திலிருந்து 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இம்மாதத் தொடக்கத்தில் ஜோகூர் பாரு மற்றும் கோத்தா திங்கி வட்டாரங்களில் உள்ள ஆறுகளில் இரசாயணக் கழிவுகள் கொட்டப்பட்டதால், துர்நாற்ற தூய்மைகேடு ஏற்பட்டது.

அதே சமயம், Sungai Linggui ஆற்று நீர் மாசடைந்து, கம்போங் பாசீர் பூர்வக் குடி மக்கள் 38 பேர் மூச்சுத் திணறலுக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!