
கோலாலம்பூர், ஏப்ரல்- 5 – கோலாலாம்பூர் , ச்செராஸ், ஜாலான் ச்செங்கேவில் கடத்தல்காரர்களிடமிருந்து ஓர் ஆடவரை மீட்கும் முயற்சியில், போலீஸார் Perodua Aruz கார் டயர்களை துப்பாக்கியால் சுட வேண்டியதாயிற்று.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகம் மற்றும் டாங் வாங்கி குற்றப்புலனாய்வுத் துறையைச் சேர்ந்த குழுவினர், சந்தேகத்திற்குரிய MPV வாகனத்தை நிறுத்தச் சொன்ன போது, தப்பிக்கும் முயற்சியில் அந்த மீண்டும் மீண்டும் போலீஸ் வாகனத்தை மோதியது.
இது போலீஸாரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதால், சந்தேக நபர்கள் பயணித்த வாகனத்தின் டயர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக, ச்செராஸ் OCPD அய்டில் போல் ஹசான் கூறினார்.
இதையடுத்து, MPV வாகனத்திலிருந்த 24 முதல் 30 வயது வரையிலான 3 சந்தேக நபர்கள் கைதாகினர்.
ஜோகூர் ஸ்கூடாயில் கடத்தப்பட்ட 26 வயது இளைஞரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
நேற்று அதிகாலை தாமான் நூசா பெஸ்தாரியில் கேளிக்கை மையமொன்றின் முன்புறத்தில் அவர் கடத்தப்பட்டது, CCTV கேமராவில் கண்டறியப்பட்டது.
கடத்தலுக்கான காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.