கூலாய், செப்டம்பர் 27 – Jalan Johor Baru – Air Hitam-மில் நேற்று தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, தெருவிளக்கில் மோதியதில் 44 வயது ஆடவர் ஒருவர் பலியானார்.
விபத்தின் தாக்கத்தில் அந்த ஆடவரின் வாகனம் ஒரு பக்கமாகக் கவிழ்ந்தது.
இந்நிலையில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தினால், அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, கூலாய் காவல்துறை தலைமை சுப்ரிடெண்டன் டான் செங் லீ (Superintendent Tan Seng Lee) உறுதிப்படுத்தினார்.