ஜோகூர் பாரு ,மார்ச் 3 – ஜோகூர் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது பொது மக்களிடமிருந்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்று வரும் அமோக வரவேற்பினால், எதிர்கட்சி வேட்பாளர் அதிருப்தி கொண்டிருக்கிறார்.
நஜிப்பின் வருகை, தேசிய முன்னணியின் மெந்திரி பெசார் வேட்பாளரான Datuk Seri Hasni Muhammad -டின் தோற்றத்தையே மூழ்கடிக்கச் செய்துள்ளது.
அத்துடன் நஜிப்பிற்கு கிடைக்கும் வருகை அவர் ஜோகூர் தேர்தலில் போட்டியிடுவது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார் பெர்லிங் (Perling) சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும், மாநில DAP கட்சி தலைவரான Liew Chin Tong தெரிவித்தார்.