Latestமலேசியா

ஜோகூரில் பி.கே.ஆர் தொகுதியில் MUDA போட்டியிடாது

ஜோகூர் பாரு, பிப் 21 – ஜோகூரில் பி.கே.ஆர் தொகுதியிலோ அல்லது இதர எதிர்க்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் Muda போட்டியிடாது என அதன் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman தெரிவித்தார்.

மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மாற்றங்களை கொண்டுவருவதற்காக இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அம்னோ மற்றும் பெர்சத்து போட்டியிடும் தொகுதியில் மட்டுமே MUDA வேட்பாளரை நிறுத்தவிருப்பதாக Syed Saddiq தெரிவித்தார்.

ஜோகூர் பாருவில் எதிர்க்கட்சி வெற்றி பெற வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிளுடன் MUDA ஒத்துழைக்கும் என்றும் விவரித்தார். MUDA கட்சி தனது சொந்த சின்னத்தில்தான் போட்டியிடும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!