ஜோகூர் பாரு, செப்டம்பர் 25 – ஜோகூர் பாருவில் உள்ள இரவுச் சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த, 4 சட்டவிரோத குடியேறிகளான சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
3 வாரங்கள் மேற்கொண்ட கண்காணிப்பைத் தொடர்ந்து, அவர்கள் முறையான ஆவணங்களின்றி இருப்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஆக்ரோஷமான தந்திரங்களைக் கையாண்டு பொதுமக்களிடமிருந்து பணம் வாங்குவதைக் குறித்தும் குடிநுழைவு துறை புகார்களைப் பெற்றுள்ளது.
ஆவணமற்ற இவர்கள் தங்கள் உடல் ஊனத்தைப் பயன்படுத்தி அனுதாபத்தைத் தூண்டி, மலேசியர்கள் அடிக்கடி வரும் இடங்களைக் குறி வைத்து மாதத்திற்கு 10,000 ரிங்கிட் வரை வசூலிக்கின்றனர்.