Latestமலேசியா

ஜோகூரில் வெள்ளத்தால் 4-வது நபர் உயிரிழப்பு

செகாமாட் , மார்ச் 4 – ஜோகூரில் வெள்ளத்தால் நான்காவது உயிரிழப்பு பதிவானது . உயிரிழந்த அந்த நான்காவது நபரான வயதான பெண்ணின் உடல் நேற்று மாலை செகாமாட், Batu Anam- மிலுள்ள கால்வாய் அருகில் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் Datuk Kamarul Zaman Mamat தெரிவித்தார்.

தனியாக வசித்து வரும் 68 வயதான அப்பெண்ணின்
உடல், வெள்ளம் சூழ்ந்த அவரது வீட்டிற்கு அருகில் , அண்டை வீட்டாரால் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதுவரை, அம்மாநிலத்தில் வெள்ளத்தால் குளுவாங்கில் ஓர் உயிரிழப்பு சம்பவமும், 3 உயிரிழப்பு சம்பவங்கள் செகாமாட்டிலும் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!