
கோத்தா திங்கி, ஜன 25 – ஜோகூரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,912 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலில் இப்போது மெர்சிங்கும் இடம் பெற்றுள்ளது. புதிதாக 14 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஜோகூரில் கோத்தா திங்கி, குளுவாங், மெர்சிங், சிகமாட் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சிகாமாட்டிலுள்ள 13 நிவாரண மையங்களில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1,392 பேர் தங்கியுள்ளனர். குளுவாங்கில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் நிவராண மையங்களில் தங்கியிருப்பதாக மாநில பேரிடர் நிர்வாகக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.