Latestமலேசியா

காலி எரிவாயு தோம்புகளில் மறைத்து வைக்கப்பட்ட 710 ,000 ரிங்கிட் போதைப் பொருள் பறிமுதல்

கூச்சிங், மார்ச் 19 – Miri யில் உள்ள ஒரு வீட்டில் காலியாக இருந்த எரிவாயு தோம்புகளில் போதைப்பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்தை கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 716,100 ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூட்டரசு போதைப் பொருள் விசாரணைத்துறையின் இயக்குநர் டத்தோ Khaw Kok Chin தெரிவித்தார். இந்த சோதனையின்போது அந்த வீட்டிற்கு முன் ஒரு காரில் இருந்த அதன் ஓட்டுனர் மற்றும் பயணி உட்பட நான்கு ஆடவர்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

அந்த வீட்டிலிருந்து 21,700 கிரேம் Syabu மற்றும் Methamphetamine போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த எரிவாயு தோம்பின் அடிப்பாகத்தில் வெட்டப்பட்ட பகுதிக்குள் 20 பொட்டலங்களில் அந்த போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டிருந்ததாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Khaw Kok Chin தெரிவித்தார். அண்டை நாட்டில் விநியோகிப்பதற்காக தீபகற்ப மலேசியாவிலிருந்து அந்த போதைப் பொருள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!