
ஜோகூர் பாரு, மார்ச் 7 – ஜோகூரில் வெள்ளத்திற்கு இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர். ஆகக்கடைசியாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக மெர்சிங் போலீஸ் தலைவர் Superintendent Abdul Razak தெரிவித்தார். 24 வயதுடைய அந்த பெண்ணின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக அவர் கூறினார். மெர்சிங்கிலிருந்து குளுவாங்கிற்கு தமது புரோடுவா மைவி காரில் சென்றுகொண்டிருந்தபோது நேற்று விடியற்காலை மணி 6.45 அளவில் அந்த பெண்ணின் கார் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக Abdul Razak தெரிவித்தார்.