Latestமலேசியா

ஜோகூரில் வெள்ளத்துக்குப் பிந்திய உதவிகளை செய்ய NGO -கள் வரவேற்கப்படுகின்றன

ஜோகூர் பாரு, மார்ச் 7 – அரசாங்க சார்பற்ற அமைப்புகள், ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்துக்குப் பிந்திய உதவிகளைச் செய்வதற்கு வரவேற்கப்படுகின்றன.

வெள்ளம் வடிந்திருக்கும் வீடுகளில் துப்புறவு பணிகளை மேற்கொள்ளவும், சமைப்பதற்கான சாதனங்கள், மின்சார பொருட்கள், படுக்கை போன்ற பொருட்களை வாங்கி கொடுத்தும் அந்த அமைப்புகள் உதவலாமென மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Mohd Jafni Md Shukor தெரிவித்தார்.

துயர் துடைப்பு மையங்களில் உணவு, Pampers போன்ற பொருட்களை வழங்கி மாநில அரசாங்கம் உதவி செய்கிறது. ஊராட்சி மன்ற தரப்பினர் , வீடுகளில் குவிந்திருக்கம் குப்பைகளை அகற்ற உதவுகின்றனர்.
இவ்வேளையில் வெள்ளத்தால் மின்சார சாதனங்கள், படுக்கை போன்றவை சேதமடைந்து பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அத்தகைய பொருட்களை வாங்கி கொடுத்து உதவலாமென Datuk Mohd Jafni குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!