
ஜோகூர் பாரு, ஜன 25 – நேற்றிரவு இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும், ஜோகூரில் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்தது. அம்மாநிலத்தில் திறக்கப்பட்டிருக்கும் 35 துயர் துடைப்பு மையங்களில் , 3,612 பேர் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
செகாமாட் ,மெர்சிங், குளுவாங்,கோத்தா திங்கி, பத்து பஹாட் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அம்மாநில அரசாங்க செயலாளர் Tan Sri Dr. Azmi Rohani தெரிவித்தார்.
அதில் வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட செகாமாட்டில் 1, 392 பேர் துயர் துடைப்பு மையத்தில் தங்கியிருப்பதாக அவர் கூறினார் . இதனிடையே, இந்த மாநிலத்தில் Sunga Muar , Sungai Segamat , Sungai Kahang ஆகிய 3 ஆறுகள் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.