Latestமலேசியா

ஜோகூரில் வெள்ளம் காரணமாக 5 பள்ளிகள் திறக்கப்படவில்லை

பத்து பாஹாட் , மார்ச் 19 – புதிய பள்ளித் தவணை தொடங்கியிருக்கும் நிலையில், முதல் நாளான இன்று, ஜோகூரில் 5 பள்ளிக்கூடங்கள் வெள்ளம் காரணமாக திறக்கப்படவில்லை.

பத்து பஹாட்டில், Sri Mendapat , Tanjong Semberong, Sri Nasib Baik ஆகிய 3 தேசியப் பள்ளிகளும்,

செகமாட்டில், Pagoh தேசிய பள்ளிக்கூடமும், Buloh Kasap இடைநிலைப் பள்ளிக்கூடமும் மூடப்பட்டிருப்பதாக, மாநில கல்வி இயக்குநர் Md Said Md Daimon தெரிவித்தார்.

Pagoh- வில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு பள்ளிக்கூடங்களில் மின்சார விநியோகம் இன்னும் திரும்பவில்லை. செகாமாட்டில் மூடப்பட்டிருக்கும் 3 பள்ளிக்கூடங்களும் நாளை திறக்கப்படும்.

இந்நிலையில், பத்து பஹாட் மாவட்டத்தில் 40 பள்ளிக்கூடங்கள் இன்னும் தற்காலிக துயர் துடைப்பு மையங்களாக செயல்பட்டு வருவதாக Md Said தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!