
சிங்கப்பூர், மார்ச் 23 – வூட்லண்ட்ஸ் சோதனை சாவடியின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனமோட்டிகள் இன்று காலை, மோசமான வாகன நெரிசலில் சிக்கினர்.
இன்று முதல் ஜோகூரில் நான்கு நாள் நீண்ட விடுமுறை தொடங்கியிருப்பதை அடுத்து, சிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்று முதல் நாள் ரமலான் என்பதோடு,ஜோகூர் மாநில சுல்தானின் பிறந்தநாளும் கூட . அவ்விரண்டுக்கும் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அனுசரிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் வார இறுதி நாள் விடுமுறையாகும்.
இன்று ரமலான் மாதம் தொடங்கியிருப்பதை அடுத்து, சுல்தான் பிறந்த நாளுக்கான பொது விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடயே, இந்த நீண்ட நாள் விடுமுறையை முன்னிட்டு ஜோகூரில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் அதிகரிக்குமென்பதால், போலீசார் போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்வர் என ஜோகூர் போலீசார் தெரிவித்தனர்.