
ஜோகூர்பாரு , மார்ச் 1 – ஜோகூரில் நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 1,591 பேர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். நேற்று முதல் ஜோகூரில் பெய்துவரும் கடுமையான மழை நாளைவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. . இன்று காலை 8 மணி முதல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 21 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன. சிகமாட், குளுவாங், ஜோகூர் பாருவில் தலா ஆறு நிவாரண மையங்களும் கோத்தா திங்கியில் மூன்று நிவாரண மையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக குழுவின் உறுப்பினர் தெரிவித்தார். சரவா மாநிலத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 278 பேர் நிவாரண மையங்களில் இருந்து வருகின்றனர்.