Latestமலேசியா

ஜோகூரில் Casino மையம் திறப்பா? எதிலும் தனக்கு சம்பந்தமில்லை என கெந்திங் விளக்கம்

கெந்திங், ஏப்ரல்-28, ஜொகூர் Forest City-யில் Casino சூதாட்ட மையம் திறப்பது குறித்து புத்ராஜெயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுவதை, Genting Malaysia Bhd திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கெந்திங் நிறுவனத்தின் துணைத் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான Tan Sri Lim Kok Thay அப்படியொரு சந்திப்பில் பங்கேற்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என அறிக்கையொன்றில் அது விளக்கியது.

எனவே பொது மக்களை வீண் குழப்பத்திற்கு ஆளாக்காமல், அத்தகையை உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.

தேவை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என கெந்திங் எச்சரித்தது.

Genting நிறுவனத்தோடு சேர்ந்து Berjaya Corp Bhd-டின் உரிமையாளர் Tan Sri Vincent Tan-னும் அரசாங்கத்துடனான சந்திப்பில் பங்கேற்றதாக கூறப்பட்டதை, Berjaya மறுத்திருந்த நிலையில், தற்போது கெந்திங் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இரண்டாவது Casino சூதாட்ட மையத்தை Forest City-யில் அமைக்க அனுமதிக்கும் திட்டமேதும் அரசாங்கத்திடம் இல்லையென, பிரதமரும் முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

அது யாரோ கிளப்பி விட்ட புரளி என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.

Johor Forest City-யில் Casino-வை அமைப்பது குறித்து Genting மற்றும் Berjaya உரிமையாளர்கள் கடந்த வாரம் அன்வாரைச் சந்தித்துப் பேசியதாக, பிரபல Bloomberg செய்தி நிறுவனம் இவ்வாரம் பரபரப்பு செய்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!