Latestமலேசியா

ஜோகூர் இடைத்தேர்தல்: சிம்பாங் ஜெராம் மற்றும் பூலாய் தொகுதியில் பக்காதான் ஹரப்பான் வெற்றி

ஜோகூர் , செப் 10 – ஜோகூரில் நேற்று சிம்பாங் ஜெராம் சட்டமன்றம் மற்றும் பூலாய் நாடாளுமன்றத்திற்கான இடைத்தேர்தலில் பக்காதான் ஹரப்பான் தனது வெற்றியைத் தற்காத்துக் கொண்டது.

சிப்பாங் ஜெராம் சட்டமன்ற தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் 3,514 வாக்குகள் பெரும்பான்மையில், 13,844 வாக்குகள் பெற்று இவ்வெற்றியைப் பெற்றார்.

இத்தொகுதியில் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் வேட்பாளர் டாக்டர் மஸ்ரி யஹ்யா 10,330 வாக்குகளையும் , சுயேச்சை வேட்பாளர் S .ஜெகநாதன் 311 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜொகூர் சட்டமன்ற தேர்தலின்போது காலஞ்சென்ற சலாஹூடின் அயோப்பிற்கு கிடைத்த 40.94 விழுக்காடு வாக்குகளை ஒப்பிடும்போது நேற்றைய இடைத் தேர்தலில் நஸ்ரி கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதனிடையே பூலாய் நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொண்டது. அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளரான சுஹைசன் கையாட் 18,641 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் அவருக்கு மொத்தம் 48,283 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த சுல்கிஃபிலி ஜஃபார் 29,642 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் சம்சுதீன் முஹமட் 528 வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டனர்.

கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சலாஹூடின் அயோப் பெற்ற 55.5 விழுக்காடு வாக்குகளைவிட இது அதிகமாகும். பக்காத்தானுக்கு 62 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன.

Pulai நாடாளுமன்ற தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொண்டதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கம் நிலைநிறுத்திக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!