Latestமலேசியா

ஜோகூர் கடலில் மீன்பிடித்துறையின் படகும் , நான்கு பணியாளர்களும் காணவில்லை

கோலாலம்பூர், மார்ச் 1 – ஜோகூர் கடல் பகுதியில் மீன்பிடித்துறையின் படகும் அதிலிருந்த 4 பணியாளர்களும காணவில்லை என நம்பப்படுகிறது. அந்த படகை கண்டுப்பிடிப்பதில் உதவும்படி சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய ஆகிய நாடுகளின் அதிகாரிளுடன் புத்ரா ஜெயா தொடர்பு கொண்டுள்ளது. கோத்தா திங்கி, Pengerang கிலிருந்து Pengkalan Tampoi க்கு சென்று கொண்டிருந்தபோது அந்த படகு காணாமல்போனதாக ஜோகூர் கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் Nurul Hizham zakaria தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த படகு ஆகக்கடைசியாக காணப்பட்ட Tuas மற்றும் Tanjung Piai கடல் பகுதிகளில் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக Nurul Hizam கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!