கோலாலம்பூர், பிப் 20 – கோவிட் தொற்றினால், கோலாலம்பூர், ஜோகூர், கிளந்தான் ஆகிய மாநிலங்களில் , ICU தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளதாக, சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இவ்வேளையில், நாட்டின் 10 மாநிலங்களில், ICU அல்லாத கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக சிலாங்கூரில் கோவிட் தொற்று நோயாளிகளுக்கான கட்டில்களின் பயன்பாடு 95 விழுக்காடாகவும், கிளந்தானில் 93 விழுக்காடாகவும், புத்ராஜெயாவில் 92 விழுக்காடாகவும் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.