ஜோகூர் பாரு, பிப் 26 – ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 56 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நடைமுறை முடிவுற்ற பின்னர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதிபெற்றவர்களின் பெயர் பட்டியலை தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பார்கள்.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றான ம.இ.கா இந்த தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜோகூர் ம.இ,கா தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஆர்.வித்யானந்தன் Kahang தொகுதியை தற்காத்துக் கொள்வதற்கு போட்டியிடுகிறார்.
தெங்காரோ சட்டமன்ற தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் ரவின்குமார் கிருஷ்ணாமி போட்டியிடுகிறார்.
ஜோகூர் மாநில மகளிர் பிரிவின் தலைவியான சரஸ்வதி நல்லதம்பி kemelah தொகுதியிலும் , மத்திய செயலவை உறுப்பினரான S . சுப்பையா, Bukit Batu சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அந்த நால்வரும் தங்களது வேட்பு மனுக்களை இன்று காலை சமர்ப்பித்தனர்.