கோலாலம்பூர், ஜன 8 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கூடுதலாக இடம்பெற்றிருக்கும் சுமார் 750,000 வாக்காளர்கள் தேசிய முன்னணிக்கு மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கக்கூடும் என அம்னோவின் துணைத்தலைவரான முகமட் ஹசான் கூறினார். 2018ஆம் ஆண்டில் இருந்த 18 லட்சம் வாக்காளர்களில் கூடுதலாக 750,000 வாக்காளர்கள் சேர்ந்திருப்பது பெரிய அளவிலான எண்ணிக்கையாகும். அதே வேளையில் 750,000 புதிய வாக்காளர்களில் அனைவரும் 18 முதல் 21 வயதுடையவர்கள் அல்ல என முகமட் ஹசான் சுட்டிக்காட்டினார்.
Related Articles
Check Also
Close