கோலாலம்பூர், பிப் 7 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த வாரம் வாரிசான் கட்சி இறுதி முடிவு எடுக்கும். இது குறித்த முடிவை வாரிசான் தலைவர் Shafie Apdal அறிவிப்பார் என அக்கட்சியின் துணைத்தலைவர் Junz wong தெரிவித்தார். பிப்ரவரி 15ஆம் தேதி வாரிசான் கட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்கு ஷாபி அப்டால் ஜோகூரில் இருப்பார். அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக வாரிசான் தனது முடிவை தெரிவிக்கும். ஜோகூர் தேர்தலில் இணைந்து பணியாற்றுவது குறித்து தங்களுடன் பக்காத்தான் ஹராப்பான் இதுவரை விவாதிக்கவில்லை. ஜோகூரில் நாங்கள் போட்டியிடுவது உறுதியானால் எங்களது கட்சி பக்காத்தான் ஹராப்பானுடன் மோதுவதை தவிர்க்க விரும்புகிறது என்றும் Junz Wong விவரித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago