தங்காக் , பிப் 11- நாட்டில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து, ஜோகூரில் மாநிலத் தேர்தல் நடத்துவது பாதுகாப்பாக இருக்குமா என பலருக்கு கேள்வி இருக்கலாம்.
ஆனால், ஜோகூர் தேர்தலை ஒத்தி வைக்க சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.
சட்டமன்றம் கலைக்கப்பட்டு, மாநிலத் தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், அவசர கால நிலைக்கான அறிவிப்பின் மூலமாகவே தேர்தலை நிறுத்தி வைக்க முடியும். எனினும் அதற்கும் வாய்ப்பில்லை என, ஜோகூர் Ledang- கில் மக்களைச் சந்தித்தப் பின்னர் பிரதமர் தெரிவித்தார்.