ஜோகூர் பாரு, பிப் 10 – ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் அஞ்சல் மூலமாக வாக்களிக்க விரும்பும் மலேசிய பிரஜைகள் இணைய மூலமாக விண்ணப்பம் செய்யலாம். இந்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு வருவதாக அதன் தலைவர் Abdul Ghani Saleh தெரிவித்தார். அஞ்சலில் வாக்களிப்பதற்கு இணைய மூலமாக பதிவு செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 24 ஆம் தேதியாகும். வெளிநாடுகளில் உள்ள மலேசிய பிரஜைகள் , நாட்டிலுள்ள தற்காப்பு மற்றும் சுகாதார துறைகளில் உள்ள ஒன்பது நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே அஞ்சலில் வாக்களிப்பதற்காக இணைய மூலமாக பதிவு செய்ய முடியும் என அப்துல் கனி சாலே கூறினார்.
Related Articles
Check Also
Close