ஜோகூர் பாரு, மார்ச் 8 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்காளர்களுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
இதற்காக 63 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 22,000 த்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அவர்களது துணைவியார்கள் இன்று அஞ்சல் வாக்குகளை செலுத்துவர்.
இதுதவிர போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது துணைவியார்களும் இன்று அஞ்சல் வாக்குகஎளை செலுத்துவர். இதற்காக ஜோகூர் மாநில போலீஸ் தலைமையகத்திலும் மாநிலம் முழுமையிலும் மாவட்ட போலீஸ் தலைமையகங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 56 சட்டமன்ற தொகுகளில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 239 வேட்பாளர்கள் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.