Latestமலேசியா

ஜோகூர் தேர்தல்; அமனா சார்பில் 16 பேர் போட்டி

ஜோகூர் பாரு, பிப் 18 – அடுத்த மாதம் நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் கட்சியின் துணைத்தலைவர் Salahuddin Ayub உட்பட 16 வேட்பாளர்களை அமனா நிறுத்தவிருக்கிறது. தமது சிம்பாங் ஜெராம் சட்டமன்ற தொகுதியை இரண்டாவது தவணையாக தற்காத்துக் கொள்வதற்கு Salahuddin Ayub களம் காண்கிறார்.

ஜோகூர் அமனா தலைவர் Aminolhuda Hassan தமது Parit Yaani சட்டமன்ற தொகுதியை தற்காத்துக் கொள்வார். ஏற்கனவே இரண்டு தவணையாக அவர் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தனது வேட்பாளர்களில் நால்வர் பெண்கள். இதர மூவர் இளைஞர்களாவர் என்று அமனா கட்சி தனது முகநூலில் பதிவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!