கோலாலம்பூர், பிப் 19 -மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் தேர்தலை முன்னிட்டு கட்டுப்படுத்தப்பட்ட சொற்பொழிவு பிரச்சாரங்கள் மற்றும் வீடுகளுக்கு வருகை புரிவதற்கு அனுமதியளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் கூட்டங்களில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதோடு இரண்டு மணி நேரங்களுக்கு மட்டுமே பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணிக்கு மேல் பிரச்சார கூட்டங்களுக்கு அனுமதியில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஐவர் மட்டுமே முகக்கவசத்தோடு வீடுகளுக்கு பிரச்சாரத்திற்கு செல்ல முடியும். வீடுகளுக்கான வருகையின்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஆனால் வீட்டில் உள்ளவர்களை சந்திப்பதற்காக வீட்டிற்குள் அவர்கள் செல்ல முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.