இஸ்கண்டார் புத்ரி , பிப் 11 – ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது வேட்பாளர்களின் விபரங்களை, தேசிய முன்னணி , வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாக அறிவிக்கும்.
புதிய முகங்களையும் அறிமுகப்படுத்தவிருக்கும் தனது வேட்பாளர்கள் தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும் , இளமையானவர்களாகவும் இருப்பார்கள் என , ஜோகூர் தேசிய முன்னணி தலைவர் Datuk Hasni Mohammad தெரிவித்தார்.
இவ்வேளையில் இட பகிர்வு தொடர்பில், மசீச, மஇகா மற்றும் தேசிய முன்னணி கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.