Latestமலேசியா

ஜோகூர் தேர்தல் நள்ளிரவு வரை பிரச்சாரத்திற்கு பிரதமர் ஒப்புதல்

ஜோகூர் பாரு. மார்ச் 2 – ஜோகூர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களது சொற்பொழிவுகளை நள்ளிரவுவரை நடத்துவற்கு அனுமதிக்க பிரதமர் Ismail SabriYaakob ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கு முன் இரவு 10 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார சொற்பொழிவு நேரத்தை நள்ளிரவுவரை நீட்டிப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார் என Amanah கட்சியின் தலைவர் Mohamad Sabu தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் பக்காத்தான் தலைவர்களான டத்தோஸ்ரீ Anwar Ibrahim, Lim Guan Eng மற்றும் தாமும் கலந்துகொண்ட சந்திப்பின்போது இந்த விவகாரத்தை லிம் எழுப்பியதாக Mohamad Sabu கூறினார்.

வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டுச் செல்லப்போவதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்ததாக Mohamad Sabu விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!