Latestமலேசியா

ஜோகூர் தேர்தல் ; பெஜுவாங் 42 தொகுதிகளில் மட்டுமே போட்டி

புத்ராஜெயா, பிப் 23 – பெஜுவாங் கட்சி, ஜோகூர் மாநிலத் தேர்தலில் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 42 இடங்களில் மட்டுமே போட்டியிடும்.

பெஜுவாங் மலாய் கட்சி என்பதால், சில தொகுதிகளில் போட்டியிடுவது ஏற்புடையதாக இல்லையென , அக்கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முஹம்மட் கூறியுள்ளார்.
மலாய்க்காரர் அல்லாதவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் பெஜுவாங் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கடினமாகவே இருக்குமென அவர் குறிப்பிட்டார்.

எங்களது கட்சிக்கு பேராசை எதுவும் கிடையாது. போட்டியிடும் 42 தொகுதிகளில் பாதி இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானதாக கருதுவதாக, புத்ராஜெயா, Kepimpinan Perdana அறாவாரிய கட்டடத்தில் , ஜோகூர் மாநிலத்துக்கான இலக்குகளை வெளியிட்ட பின்னர் துன் மகாதீர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!