ஜோகூர் பாரு, பிப் 12- ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் சார்பில் 16 பெண் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அந்த பெண்களின் பெயர்கள் பெரிக்காத்தான் நேசனல் தலைமைத்துவத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய உறுப்புக் கட்சியை சேர்ந்த பெண்களும் அந்த 16 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக பெரிக்காத்தான் நேசனலின் மகளிர் பிரிவின் தலைவி ரினா முகமட் ஹருன் தெரிவித்தார். பல்வேறு பின்னணியைக் கொண்ட பெண்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து கட்சியின் தலைமைத்துவம் விரைவில் ஆக்கப்பூர்வமான முடிவை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close