ஜோகூர் பாரு , மார்ச் 8 – ஜோகூர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றுவோர் இனி முகக் கவசமின்றி உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று பரவலை தடுக்கும் SOP விதிமுறைகளில் ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தின்போது சொற்பொழிவு ஆற்றுவோர் முகக்கவசத்தை அணிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் கூடுதல் திருத்த ஆலோசனைக்கான பரிந்துரை செய்ததைத் தொடர்ந்து முகக் கவசம் மீதான SOP யில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் சொற்பொழிவு முடிந்த பின் அவர்கள் மீண்டும் முகக்கவசத்தை கட்டாயமாக அணிந்துகொள்ள வேண்டும் என அந்த புதிய SOPயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.