கோலாலம்பூர், பிப் 15 – முதல் முறையாக தேர்தலில் களமிறங்கும் மூடா கட்சி, ஜோகூர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தனது முதல் வேட்பாளரை அறிவித்திருக்கின்றது.
அக்கட்சியின் முதுகெலும்பாக விளங்கும், மூடாவின் தலைமைச் செயலாளர் Amira Aisya Abd Aziz , Puteri Wangsa தொகுதியில் போட்டியிடவுள்ளார். அந்த தொகுதியில் ஏற்கனவே அமானா கட்சி போட்டியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அந்த சட்டமன்றத் தொகுதியுடன், மூடா கட்சி , Tenang, Bukit Kepong, Parit raja, Machap, Bukit Permai ஆகிய தொகுதிகளில் தனது வேட்பாளரரை களமிறக்கவுள்ளது.