ஜோகூர் பாரு, பிப் 28 – ஜோகூர் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆலோசகரான டத்தோஸ்ரீ நஜீப்பும், பெரிக்காத்தான் நேசனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் தொடர்ந்து தங்களுக்கே உரிய வெவ்வேறு பாணியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
முஹிடின் யாசின் கம்பீர் சட்டமன்ற தொகுதியை தற்காத்துக்கொள்ளா விட்டாலும் அவர் தொடர்ந்து பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை.
டத்தோஸ்ரீ நஜீப் ஞாயிற்றுக்கிழமை காலையில் Perling கில் சீன சமூகத்தினரை சந்தித்து வாக்கு வேட்டையாடினார். அதோடு தமது முகநூலிலும் நஜீப் பரபரப்பான பதிவுகளையும் பதிவிட்டார். அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்சி, வேலை வாய்ப்பு போன்ற அம்சங்ளை ஒப்பிட்டு தேசிய முன்னணிக்கு ஆதரவாக நஜீப் வாக்குகளை வேட்டையாடி வருகிறார்.