ஜோகூர் பாரு, மார்ச் 4 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகளை அளிப்பதற்கு தகுதி பெற்ற 36,729 அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம்தேதி வெளியிடப்பட்ட அஞ்சல் வாக்கு சீட்டுக்களை 56 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தேர்தல் பணியாளர்கள் வினியோகிப்பார்கள் என தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ Ikmalrudin Ishak தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள மலேசிய பிரஜைகளுக்கான 7,814 அஞ்சல் வாக்கு சீட்டுகளும் இவற்றில் அடங்கும். அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அல்லது போட்டியிடும் தனிப்பட்ட நபர்களின் முன்னிலையில் அஞ்சல் வாக்குகளுக்கான சீட்டுகள் வெளியிடப்படும் என Ikmalrudin Ishak வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close