Latestமலேசியா

ஜோகூர் தேர்தல் 5 வேட்பாளர்களை பி.கே.ஆர் அறிவித்தது

கோலாலம்பூர், பிப் 14 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பி.கே.ஆர் கட்சி வெளியிட்டுள்ளது. Tiram, Larkin. Kempas. Bukit Batu மற்றும் Pasir Raja சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பி.கே.ஆர் தலைவர் டத்தோஸ்ரீ Anwar Ibrahim இன்று காலையில் அறிவித்தார்.

திராம் தொகுதியில் நடப்பு சட்டமன்ற உறுப்பினரான எஸ்.கோபாலகிருஷ்ணனை பி.கே.ஆர் மீண்டும் களம் இறக்கியுள்ளது. கெம்பாஸ் தொகுதியில் பி.கே.ஆர் மாநில மகளிர் பிரிவு தலைவி நப்சியா காமிஸ் , ஜோகூர் பி.கே.ஆர் இளைஞர் பகுதி செயலாளர் பாக்ருடின் மொஸ்லிம் பாசிர் ராஜா தொகுதியிலும், ஆர்தர் சியோங் சென் சென் புக்கிட் பத்துவிலும் போட்டியிடுவார்கள். லார்க்கின் தொகுதியில் டாக்டர் ஷாமில் நஜ்வா போட்டியிடுவார்.

எனினும் இந்த தொகுதிகளில் எதுவும் Muda கட்சி போட்டியிடும் தொகுதிகளில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு முன் Putera Wangsa, Tenang. Bukit Kepong, Parit Raja , Machap, Bukit Permai ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் Muda கட்சி போட்டியிடுவதை அக்கட்சியின் தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman கூறியிருந்தார். ஜோகூரின் வட மற்றும் மத்திய மண்டல பிரிவுகளின் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று பின்னேரம் பி.கே.ஆர் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!