ஜோகூர் பாரு, பிப் 26 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை வேட்பு மனுத் தாக்கல் முடிவுற்றதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கனி சாலே இதனை தெரிவித்தார்.
இரண்டு கட்சிகள் அனைத்து 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மொத்தம் 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுடன் 16 சுயேச்சை உறுப்பினர்களும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களில் 202 ஆண்கள் மற்றும் 37 பெண்களும் அடங்குவர்.
பக்காத்தான் ஹராப்பான் சார்பில் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெஜூவாங் கட்சியின் சார்பில் 42 வேட்பாளர்களும், PKR சார்பில் 20 வேட்பாளர்களும், MUDA கட்சியின் சார்பில் 7 பேரும், வாரிசான் கட்சியின் பிரதிநிதியாக 6 பேரும், பார்ட்டி பங்சா மலேசியா சார்பில் 4 பேரும், புத்ரா மற்றும் பி.எஸ் .எம் கட்சிகளின் சார்பில் தலா ஒருவரும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏழு தொகுதிகளில் மும்முனைப் போட்டியும், 35 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும், எட்டு தொகுதிகிளில் ஐந்து முனைப் போட்டியும், நான்கு தொகுதியில் ஆறு முனைப் போட்டியும் இரண்டு தொகுதிகளில் ஏழு முனைப் போட்டியும் நடைபெறுவதாக அப்துல் கனி தெரிவித்தார்.