ஜோகூர் பாரு, பிப் 24 – ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு 894 வேட்பு மனு பாரங்கள் இதுவரை விற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அதில், 295 பாரங்கள் பெரிக்காத்தான் நெஷனல் கூட்டணிக்கும், 99 பாரங்கள் தேசிய முன்னணி கூட்டணிக்கும், 86 பாரங்கள் பெஜுவாங் கட்சிக்கும் விற்கப்பட்டுள்ளன.
ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான நியமன நாள் இவ்வாரம் சனிக்கிழமையாகும். அதையடுத்து போட்டியிடும் வேட்பாளர்கள் முன்கூட்டியே வைப்புத் தொகையை செலுத்தும்படியும் , வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளன்று அதற்கான ரசீதை கொண்டு வரும்படியும் , தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.