Latest
ஜோகூர் தேர்தல் Muda கட்சிக்கு 6 தொகுதிகள்
கோலாலம்பூர், பிப் 9 – அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் Muda கட்சி ஆறு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அனுமதிப்பதற்கு DAP மற்றும் Amanah வழிவிட்டுள்ளன. மூன்று கட்சிகளுக்கிடையே நேரடி மோதல் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக DAP தலைமைச் செயலாளர் Lim Guan Eng, Amanah தலைவர் Mohamad Sabu மற்றும் Muda தலைவர் Syed Saddiq Syed Abdul Rahman ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
Tenang, Bukit Kepong, Parit Raja, Machap, Puteri Wangsa, Bukit Permai ஆகிய தொகுதிகளில் Muda போட்டியிடும். Pakatan Harapan னில் Muda உறுப்பினராக இல்லாவிட்டாலும் ஜோகூர் தேர்தலில் Amanah, Dap ,Muda ஆகியவவை விவேகமான தேர்தல் வியூக பங்காளித்துவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.