கூலாய், பிப் 24 – ஜோகூர் தேர்தலுக்கான SOP விதிமுறைகளை மறுபரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக்கொண்டார்.
அந்த SOP கடுமையாக இருப்பதோடு நடைமுறைக்கு பொருத்தமானதாக இல்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடவடிக்கை அறையில் மட்டுமே பிரச்சாரத்திற்கான சொற்பொழிவு நடைபெற வேண்டும் என்று கூறப்படுவது நியாயமாக இல்லை. தேர்தல் நடவடிக்கை அறையில் மட்டும் பிரச்சாரம் நடத்தப்பட்டால் ஜோகூரிலுள்ள ஒவ்வொருவரும் எப்படி கலந்துகொள்ளமுடியும் என்றும் அவர் வினவினார்.
சமூக நடவடிக்கைகள் , திருமணங்கள், திருமண விருந்து போன்றவை நடத்தப்படும்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு கடுமையான SOP க்கள் அமல்படுத்தப்படுவது ஏற்புடையதாக இல்லை என்றும் முஹிடின் சுட்டிக்காட்டினார்.