ஜோகூர் தைப்பூச கொண்டாட்டத்திற்கு சுல்தான் இப்ராஹிம் வருகை

ஜோகூர் பாரு, பிப் 5 – ஜோகூர் பாரு ஸ்கூடாயில் அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச கொண்டாட்ட நிகழ்ச்சியில் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் கலந்துகொண்டு சிறப்பித்தார். அந்த நிகழ்வில் ஜோகூர் மந்திரிபுசார் டத்தோ ஓன் ஹபிஸ் கஸ்னியும் கலந்துகொண்டார். 50 ஆண்டு காலமாக அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்விலும் சுல்தான் பங்கேற்றார். ஆலயத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அந்த நிகழ்வில் சுல்தான் இப்ராஹிம் 40 நிமிடங்கள் செலவிட்டார்.
கோவிட் 19 பெருந்தொற்று பரவிய மூன்று ஆண்டு காலத்திற்கு பிறகு முதல் முறையாக சுல்தான் இப்ராஹிம் தைப்பூச கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டார். ஆகக்கடைசியாக 2019 ஆம் ஆண்டு Wadi Hana விலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச நிகழ்வில் சுல்தான் இப்ராஹிம் கலந்துகொண்டார்.