Latestமலேசியா

ஜோகூர் பாருவில் உணவகத்தின் முன் பட்டப்பகலில் ஆடவர் சுட்டுக் கொலை

ஜோகூர் பாரு, ஜனவரி-9, ஜோகூர் பாரு, தாமான் செத்தியா இண்டாவில் உணவகமொன்றின் முன்பே பட்டப்பகலில் ஒர் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று தனது நண்பர்களுடன் அவ்வுணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 40 வயது அவ்வாடவர் சுடப்பட்டார்.

சம்பவ இடம் விரைந்த மருத்துவக் குழு அவர் மரணமடைந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.

விசாரணைக்கும் உதவும் வகையில், அவ்வுணவகம் மற்றும் அருகிலுள்ள வர்த்தகத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவுகளைப் போலீஸ் எடுத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில் கொலையாளிகளைக் கண்டறியவும், கொலைக்கானக் காரணத்தைக் கண்டறியவும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை அடையாளம் காணவும் விரிவான விசாரணை நடைபெறும் என்றார் அவர்.

விசாரணைகளைப் பாதிக்கும் என்பதால் அவர் மேற்கொண்டு கருத்துரைக்க மறுத்து விட்டார்.

அவ்வாடவர் சுடப்பட்ட போது உணவகத்தின் முன் ஏற்பட்ட சலசலப்புகளைக் காட்டும் 10 வினாடி விடியோ முன்னதாக வைரலாகியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!