ஜோகூர் பாரு, நவம்பர்-11 – ஜோகூர் பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள இரு கேளிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், GRO எனப்படும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 36 தாய்லாந்து பெண்கள் கைதாகினர்.
மற்றவர்கள் 2 தாய்லாந்து ஆண்கள், மூன்று மியன்மார் நாட்டவர்கள், தலா ஒருவர் வியட்நாம் மற்றும் லாவோசைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
எஞ்சிய 3 உள்ளூர் ஆடவர்களும், அக்கேளிக்கை மையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் என நம்பப்படுகிறது.
பாலியல் சேவை வழங்கி வந்ததாக நம்பப்படும் அப்பெண்கள், அதிகாரிகளிடம் சிக்காமலிருக்க மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.
கேளிக்கை மையத்தோடு அனைத்தையும் முடித்துக் கொள்ள 50 ரிங்கிட் கட்டணமும், வாடிக்கையாளர்களின் வீடு வரை வர வேண்டுமென்றால் ஓர் இரவுக்கு 800 ரிங்கிட் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமூகப் பயண அனுமதியுடன் (social visit pass) மலேசியா வந்த அக்கும்பல், அந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி இங்கே ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக குடிநுழைவுத் துறை கூறியது.