Latestமலேசியா

ஜோகூர் பாருவில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற தாயைத் தேடும் JKM

ஜோகூர் பாரு, செப்டம்பர்-4 – பிறந்து நான்கு வாரங்களே ஆன ஆண் குழந்தையை ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாயை, சமூக நலத் துறை (JKM) தேடி வருகிறது.

Athar Jazmi என்ற பெயரைக் கொண்ட அக்குழந்தை down syndrome குறைபாட்டுடனும், சிறுநீரகக் கோளாறாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுவாசிப்பதற்கே ஆக்சிஜன் இயந்திரத்தை நம்பி தான் அக்குழந்தை இருப்பதாக, ஜொகூர் பாரு JKM தெரிவித்தது.

ஆகக் கடைசியாக ஆகஸ்ட் 27-ஆம் தேதி குழந்தையைப் பார்க்க வந்த தாயை, அதன் பிறகு காணவில்லை.

போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியது அம்பலமானதால், சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் 42 வயது அந்த வெளிநாட்டுப் பெண் தலைமறைவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் அப்பெண், அம்மருத்துவமனையில் குழந்தையைப் பதியும் போது, உள்ளூர் பெண்ணின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Bandar Seri Alam, Flat Tasek அடுக்குமாடி குடியிருப்பில் அப்பெண்ணும் குடும்பத்தாரும் தங்கியிருந்த வீட்டில் சென்று சோதனையிட்ட போது, அவர்கள் அங்கிருந்து தப்பியது தெரிய வந்தது.

அக்குழந்தையின் பிறப்பைப் பதிவுச் செய்ய வேண்டியிருப்பதால் அவரின் தாயை JKM தீவிரமாக தேடுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!