Latestமலேசியா

ஜோகூர் பாருவில் புதிதாக இரு மருத்துவமனைகள் கட்டப்படும்

ஜோகூர் பாரு, ஆக 12 – ஜோகூர் பாருவில் பாசீர் கூடாங் மற்றும் கெம்பாஸில் இரண்டு புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். ஜோகூர் பாருவில் சுல்தானா அமினா மற்றும் சுல்தான் இஸ்மாயில் ஆகிய இரு மருத்துவமனைகளிலும் கூட்ட நெரிச்சலை குறைப்பதற்கு புதிதாக கட்டப்படும். அந்த இரண்டு மருத்துவமனைகள் உதவ முடியும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். பாசீர் கூடாங் மருத்துவமனையின் கட்டுமானம் தற்போது 40 விழுக்காடு முழுமையடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் அந்த மருத்துவமனை முழுமையாக பூர்த்தியடைந்துவிடும் என அவர் கூறினார். சுல்தானா அமினா இரண்டாவது மருத்துவமனையின் கட்டுமானம் குறித்து அக்டோபர் 28ஆம் தேதி சமர்ப்பிக்கப்படவிருக்கும் வரவு செலவு திட்ட அறிக்கையின்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புதிதாக கட்டப்படவிருக்கும் இரண்டு மருத்துவமனைகளும் 700க்கும் மேற்பட்ட படுக்கைகளை கொண்டிருக்கும் என கைரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!