Latestமலேசியா

ஜோகூர் பாருவில் 3 வீடமைப்புப் பகுதிகளில் இராசயண துர்நாற்றம்; விசாரணையில் இறங்கியத் தீயணைப்புத் துறை

ஜோகூர் பாரு, செப்டம்பர் -3, ஜோகூர் பாருவில் 3 வீடமைப்புப் பகுதிகளில் இன்று அதிகாலை இரசாயண துர்நாற்றம் கண்டறியப்பட்டது.

Taman Mount Austin, Taman Daya, Taman Istimewa ஆகியவையே அம்மூன்று பகுதிகளாகும்.

தகவலறிந்து 19 பேர் கொண்ட தீயணைப்பு மீட்புப் குழுவும், இரு FRS இயந்திரங்களும், EMRS அவசர சேவைப் படையும் சம்பவ இடம் விரைந்தன.

சோதனைகள் தொடரும் நிலையில், அது எந்த மாதிரியான இரசாயணம், எந்தளவுக்கு ஆபத்தானது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

துர்நாற்றம் ஒருவேளை ஆற்றிலிருந்து வருகிறதா அல்லது வேறெங்கிருந்தோ வருகிறதா என்பதும் ஆராயப்படுகிறது.

தற்போதைக்கு விரிவான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, வாயு கண்டறிதல் கருவி (gas detector) வாயிலாக காற்றின் தரமும் கண்காணிக்கப்படுவதாக, தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!