ஜோகூர் பாரு, ஜனவரி-2, ஜோகூர் பாரு, தாமான் பெர்லிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் புத்தாண்டை ஒட்டி மது போதையில் ஆட்டம் போட்ட 9 முஸ்லீம்களை, மாநில இஸ்லாமிய சமயத் துறை கைதுச் செய்துள்ளது.
பொது மக்கள் கொடுத்த புகார்கள் பேரில் ஹோட்டலின் cafe உணவகத்தில் இரவு 11 மணிக்குச் சோதனைத் தொடங்கியது.
அப்போது, வருகையாளர்கள் மது போதையில் ஆட்டம் போடவும் நுரையில் விளையாடவும் தனியிடத்தை ஹோட்டல் நிர்வாகம் ஒதுக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
பணியாளர்கள் மற்றும் வருகையாளர்கள் என மொத்தம் 29 முஸ்லீம்களிடம் சோதனை நடத்தியதில், அவர்களில் 9 பேர் மதுபோதையிலிருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
அவர்களில் 5 பெண்களும் 4 இந்தோனீசியர்களும் அடங்குவர்.
இதையடுத்து 1997-ஆம் ஆண்டு ஜோகூர் ஷாரியா சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அந்த 9 பேரில் 6 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளனர்; எஞ்சிய மூவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Mohd Fared Mohd Khalid தெரிவித்தார்.