Latestமலேசியா

ஜோகூர் பாரு ஹோட்டல் கார் நிறுத்துமிடத்தில் தூணை மோதியக் கார்; 61 வயது மூதாட்டி பலி

ஜோகூர் பாரு, டிசம்பர்-28, ஜோகூர் பாருவில், தான் ஓட்டிய கார் தடம்புரண்டு ஹோட்டல் கார் நிறுத்துமிட தூணை மோதியதில், 61 வயது மூதாட்டி உயிரிழந்தார்.

நேற்றிரவு 8.45 மணியளவில் மூன்றாவது மாடியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

கார் கட்டுப்பாட்டை இழந்து தூணை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக, தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் (Raub Selamat) கூறினார்.

முப்பெரும் நோய்கள் எனக் கூறப்படும் இதய நோய், நிரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையால் அம்மாது பாதிக்கப்பட்டிருந்தது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருப்பின்,  தென் ஜோகூர் பாரு போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு உதவுமாறு ரவூப் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!